Home இலங்கை அரசியல் விரைவில் சுமந்திரனுக்கு ஓய்வு: NPP தரப்பின் அதிரடி கருத்து

விரைவில் சுமந்திரனுக்கு ஓய்வு: NPP தரப்பின் அதிரடி கருத்து

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் (M. A. Sumanthiran) மற்றும் அவரது கும்பலுக்கு விரைவில் நிரந்தர ஓய்வு கிடைக்கும் என மட்டக்களப்பு கல்குடா தொகுதியின் தேசிய மக்கள் சக்தி அமைப்பாளர் திலீப்குமார் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

அநுர அரசுக்கு ஆரம்பத்தில் வாக்களித்த மக்கள் இன்று பிழையானவர்களைத் தெரிவு செய்துவிட்டோம் என வருத்தப்படுவதாக சுமந்திரன் கருத்து ஒன்று தெரிவித்திருத்திருந்தார்.

அனுமதி பத்திரம் 

இதற்கு பதிலளிக்கும் விதமாகவே அவர் இந்த கருத்தை பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பில் அந்த பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியம் இனிக் கிடையாது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வரியில்லா வாகன இறக்குமதி அனுமதி பத்திரம் கிடையாது.

பேரினவாத அரசியல் 

சிங்கள பௌத்த பேரினவாத அரசியலை அநுர அரசு செய்வதில்லை என்பதால் தமிழ்த் தேசிய அழிவு அரசியலை வைத்து பிச்சை எடுக்க முடியாத நிலைமை.

தென்னிலங்கையில் ரணில், ராஜபக்ச மற்றும் பண்டாரநாயக்க குடும்பங்கள் நிரந்தர அரசியல் ஓய்வுக்கு செல்வது போல் விரைவில் சுமோ கும்பலுக்கும் ஓய்வு கிடைக்கும்.

ஆனால், எந்தவொரு அரசு கொடுப்பனவுகளும் கிடைக்காது, அஸ்வெசுமவுக்கு மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version