Home இலங்கை அரசியல் ஐக்கிய மக்கள் சக்திக்குள் தலைமைத்துவ மாற்றம்: உறுதியாக கூறும் முன்னாள் எம்.பி

ஐக்கிய மக்கள் சக்திக்குள் தலைமைத்துவ மாற்றம்: உறுதியாக கூறும் முன்னாள் எம்.பி

0

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் விரைவில் தலைமைத்துவ மாற்றத்திற்கான
போராட்டத்தைத் தொடங்குவார்கள் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டயனா கமகே
தெரிவித்துள்ளார்.

இதனால் கட்சி வெற்றிப் பாதையில் செல்லும் என்றும் அவர் செய்தியாளர்களிடம்
தெரிவித்துள்ளார். கடவுச்சீட்டு குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்துக்கு சென்று திரும்பும்
வழியில் அவர் இந்த கருத்தை நேற்று(17) வெளியிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியினர், தங்கள் தலைவர் ரணில்
விக்ரமசிங்கவை எவ்வாறு எதிர்கொண்டார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

ரணில் விக்ரமசிங்க

ரணில் விக்ரமசிங்க தலைவராக இருக்கும் கட்சி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்று
கூறி, தலைமைத்துவ மாற்றத்திற்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.

இன்று அதேநிலையே ஐக்கிய மக்கள் சக்திக்கும் நடக்கும் என்று டயனா கமகே
கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version