யாழ்ப்பாணம் (Jaffna) உள்ளிட்ட வடமாகாணத்தில் பல பகுதிகளில் வேட்பாளர்களின் துண்டுப்பிரசுரங்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் வீசப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்றையதினம் (14.11.2024) சுமுகமாக இடம்பெற்று வருகிறது.
துண்டுப்பிரசுரங்கள்
இந்நிலையில், யாழ்ப்பாணம் வவுனியா (Vavuniya) உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளரின் துண்டுப்பிரசுரங்கள் வாக்குச்சாவடிகளுக்கு முன்பாக வீசப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்ற தேர்தல் இன்றைய (14.11.2024) தினம் காலை ஆரம்பிக்கப்பட்டு தற்போது வரையில் அமைதியான முறையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.