Home இலங்கை சமூகம் வாகன சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

வாகன சாரதிகளுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

0

போயா தினங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வகையில் வாகனங்களை நிறுத்தும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களை சாரதிகள் இன்றி காவல்துறை அதிகாரிகள் அகற்றுவார்கள் எனவும் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பண அறவீடு

அத்துடன், அகற்றப்படும் வாகனங்களுக்காக காவல்துறை உத்தியோகத்தர்கள் செலவிடும் பணத்தை வாகன சாரதியோ அல்லது உரிமையாளரோ செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவளை,  பொசன் வலயங்கள் உள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க கிட்டத்தட்ட 27,000 சமூக காவல்துறை குழு உறுப்பினர்கள் கடமையில்ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், பொசன் காலத்தில் மேலதிக கடமைகளுக்காக 20,000 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version