Home இலங்கை சமூகம் மின்கம்பம் விழுந்ததில் இளைஞன் பலி: தொடரும் விசாரணைகள்

மின்கம்பம் விழுந்ததில் இளைஞன் பலி: தொடரும் விசாரணைகள்

0

மின்சார சபைக்கு சொந்தமான மின்கம்பம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹகுரன்கெத்த காவல்துறை பிரிவிற்குட்பட்ட மெதகம பிரதேசத்தில் நேற்று (20) இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான லொறியில் இருந்து மின்கம்பத்தை அகற்றும் போது ஊழியர் ஒருவரின் உடல் மீது மின்கம்பம் விழுந்ததில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

விசாரணை

அதன்போது, மின்சார சபையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்த 23 வயதுடைய அம்பகமுவ, உடபுலத்கம பகுதியைச் சேர்ந்த இளைஞரே உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version