Home இலங்கை அரசியல் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்பட்டால் சட்ட
நடவடிக்கை எடுப்பது குறித்து ஆராய்வதாக, ஓய்வுப் பெற்ற நாடாளுமன்ற
உறுப்பினர்களது கூட்டமைப்பின் செயலாளர் பிரேமசிறி மானகே எச்சரித்துள்ளார். 

ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 30 பேர் ஓய்வு பெற்று
ஓய்வூதியத்தை நம்பி உள்ளனர்.

ஓய்வூதியம் குறைக்கப்பட்டால்

மேலும், ஜேவிபியின் 50 நாடாளுமன்ற
உறுப்பினர்கள், அரசியலில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில் அவர்களின் ஓய்வூதியம் குறைக்கப்பட்டால் அவர்களுக்கு என்ன
நடக்கும் என்று மானகே கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த விவகாரம் தொடர்பாக சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும்
ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்திடம்
முறையிடப் போவதாகவும் மானகே எச்சரித்துள்ளார்.

அமைச்சரவையின் அங்கீகாரம்

முன்னதாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கும்,
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு உரிமைகளை
ரத்து செய்வதற்கும் ஒரு வரைவு சட்டத்தை அமைச்சரவை கடந்த மாதம்
அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் – 29.07.2025

NO COMMENTS

Exit mobile version