Home இலங்கை அரசியல் எம்பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்தால் சட்ட நடவடிக்கை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எம்பிக்களின் ஓய்வூதியத்தை இரத்து செய்தால் சட்ட நடவடிக்கை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் இரத்து செய்யப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்பு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த விடயத்தினை அந்த கூட்டமைப்பின் செயலாளர் பிரேமசிறி மானகே (Pemasiri Manage) தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் குறித்த விவகாரம் தொடர்பாக சர்வதேச நாடாளுமன்ற ஒன்றியம் மற்றும் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்திடம் முறையிடவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வூதியத்தை நம்பி உள்ளவர்கள்

ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 30 பேர் ஓய்வு பெற்று
ஓய்வூதியத்தை நம்பி உள்ளனர், ஜேவிபியின் 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியலில் ஈடுபடுகின்றனர் எனவும் மானகே சுட்டிக்காட்டினார்.

இந்தநிலையில் அவர்களின் ஓய்வூதியம் குறைக்கப்பட்டால் அவர்களுக்கு என்ன
நடக்கும் என்று அவர் மேலும் கேள்வி எழுப்பியுள்ளார்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்கும், முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு உரிமைகளை இரத்து செய்வதற்குமான ஒரு சட்ட மூல வரைவுக்கு அமைச்சரவை கடந்த மாதம் அங்கீகரித்த நிலையிலேயே இந்தக்கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version