பிரபல தொழிலதிபர் சரவணன் அருள் லெஜெண்ட் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அவர் தயாரித்து ஹீரோவாக நடித்த லெஜெண்ட் படம் பெரிய வசூலை எல்லாம் பெறவில்லை.
அடுத்து தனது இரண்டாவது படத்தில் தற்போது லெஜெண்ட் சரவணன் நடித்து வருகிறார். எதிர்நீச்சல், கொடி போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார்.
ரிலீஸ் தேதி
இந்நிலையில் இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
படத்திற்கு மாஸான டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது எனவும், விரைவில் அறிவிப்பு வரும் எனவும் லெஜெண்ட் சரவணன் கூறி இருக்கிறார்.
#TheLegendInAFamilyFunction 🌟
தீபாவளி வெளியீட்டை நோக்கி இறுதி கட்ட படப்பிடிப்பு…#TheLegendsNextUpdate 🔥#TheLegend #LegendSaravanan @Dir_dsk @onlynikil pic.twitter.com/okeGJ9jTAN
— Legend Saravanan (@yoursthelegend) June 27, 2025
