Home இலங்கை அரசியல் சகல மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் யுகத்தை உருவாக்குவோம் : சஜித் சூளுரை

சகல மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் யுகத்தை உருவாக்குவோம் : சஜித் சூளுரை

0

சகல மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் யுகத்தை எமது ஆட்சியில்
உருவாக்கியே தீருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

பிரபஞ்சம் பஸ் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், 88ஆவது கட்டமாக 50 இலட்சம்
ரூபா பெறுமதியான பேருந்து யாழ்ப்பாணம், சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு வழங்கி
வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

அடிப்படை உரிமைகள்

மேலும் தெரிவிக்கையில், “எமது நாட்டின் அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகளுக்கான தனியான உள்ளடக்க
அத்தியாயம் ஒன்று உள்ளது.

இந்த அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் சிவில்
மற்றும் அரசியல் உரிமைகளே உள்ளடங்கியுள்ளன. பொருளாதாரம், சமூகம், கலாசாரம்,
மதம், கல்வி, சுகாதாரம் ஆகிய அம்சங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை.

இந்நிலையில் பாடசாலைகளுக்கு பேருந்துகளை வழங்கி வைக்கும் போது, பஸ் மேன் என்று
இழிவுபடுத்தி, சேறு பூசி, விமர்சிக்கும் பொறாமை கொண்ட ஓர் கூட்டத்தினரும் இந்த
வங்குரோத்து நாட்டில் இருந்து வருகின்றனர்.

எதிர்க்கட்சி அரசியல்

இவ்வாறான பேருந்துகளை வழங்கும் போது
தம்மை விமர்சிப்பதை விடுத்து தமக்குப் போட்டியாக மக்களுக்காக சேவை செய்ய
முன்வருமாறே அத்தகையவர்களுக்குக் கூற வேண்டியுள்ளது.

மேலும், 76 ஆண்டுகால வரலாற்றில் எதிர்க்கட்சியாக இருந்து எந்த அரசியல்
கட்சியும் செய்யாத பணியை ஐக்கிய மக்கள் சக்தி செய்து வருகின்றது.

இந்நாட்டு
எதிர்க்கட்சி அரசியலுக்கு ஐக்கிய மக்கள் சக்தி புதிய கற்பிதங்களைப் போதித்து
வருகின்றது.

இந்தச் சேவையைக் கண்டு பார்த்துக் கொண்டிருக்க முடியாத குழுவொன்று இதனை விமர்சித்து வருகின்றது” என்றும் எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version