Home இலங்கை அரசியல் எம்பி நிலந்தி கொட்டஹச்சி தொடர்பிலான அவதூறு பதிவு: அமைச்சர் லால்காந்த எழுப்பிய கேள்வி

எம்பி நிலந்தி கொட்டஹச்சி தொடர்பிலான அவதூறு பதிவு: அமைச்சர் லால்காந்த எழுப்பிய கேள்வி

0

காதலர்கள் காதல் செய்யும் போது, மற்றவர்கள் ஏன் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும்? சமூக ஊடகங்களுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” என்று விவசாயத்துறை அமைச்சர் கே.டி லால்காந்த கேள்வி எழுப்பியுள்ளார். 

நிகழ்வு ஒன்றுக்கு பின்னர், ஊடகவியலாளர்கள் மத்தியில் அவர் இந்தக் கேள்விகளை தொடுத்தார்.

தமது சக நாடாளுமன்ற உறுப்பினரான நிலந்தி கோட்டஹாச்சி தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியான தகவல்கள் தொடர்பிலேயே அவர் இந்தக் கேள்விகளை எழுப்பியுள்ளார். 

சமூக ஊடகங்கள்

முன்னதாக, தனது மகள் கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் படித்து வருவதாக சமூக ஊடகங்கள் கூட ஒரு கதையை உருவாக்கியதாக லால்காந்த குறிப்பிட்டார். 

அந்த நேரத்தில் அரசு ஊடகங்கள் கூட அந்தச் செய்தியை வெளியிட்டன. அதனை தாமும் தமது மகளும் பார்த்துக் கொண்டிருந்தோம். அதன்போது, தனக்குத் தெரியாமல் கனடாவில் தனக்கு ஒரு மகள் இருக்கிறாரா என்று விசாரிக்க வேண்டும் என்று நினைத்ததாக லால்காந்த தெரிவித்தார்.

கோட்டஹாச்சி சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினை இருந்தால், அது அவரது குடும்பத்தினர் கவனிக்க வேண்டிய விடயமாகும். மற்றவர்கள் ஏன் அதில் வம்பு செய்கிறார்கள் என்றும் அவர் வினவினார். 

NO COMMENTS

Exit mobile version