Home இலங்கை அரசியல் மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளியோம்! ஜனாதிபதி உறுதி

மீண்டும் யுத்தம் ஏற்பட இடமளியோம்! ஜனாதிபதி உறுதி

0

மீண்டும் ஒரு மோதல்
ஏற்பட இடமளிக்காமல், வெறுப்பு நிறைந்த சமூகத்திற்குப் பதிலாக சகோதரத்துவம்,
அன்புடன் கூடிய ஒற்றுமை நிறைந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

 நேற்று (19) நடைபெற்ற தேசிய படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில்,  மீண்டும் நாட்டில் யுத்தம்
ஏற்படுவதைத் தடுக்க சிங்கள, தமிழ்,முஸ்லிம், பேர்கர், மலே, கிறிஸ்தவர் என சகல
மக்களும் ஒரே நாட்டிற்குள் ஒற்றுமையாக நாட்டைக் கட்டியெழுப்பப் போராடுகின்றனர்.

அமைதியான சமூகம்

பாரிய அழிவை சந்தித்த
தாய்நாட்டில் அவ்வாறான யுத்தம் மீள ஏற்படுவதை தடுப்பது எமது பொறுப்பாகும்.

கடந்த கால சம்பவங்களில் இருந்து பாடம் கற்க வேண்டும். மீள அவ்வாறான நிலை எமது
தாய்நாட்டில் ஏற்பட இடமளிக்கக் கூடாது . யுத்தமற்ற, குரோதமோ, சந்தேகமோ அற்ற
நாடு உருவாக்கப்பட வேண்டும்.

மீண்டும் மோதல், குரோதம் உள்ள நாட்டுக்குப்
பதிலாக சமாதானமான நாட்டை உருவாக்குவதே அவர்களுக்கு நாம் செய்யும் கௌரவமாகும்.

யுத்தம் ஒருபோதும் வெற்றியை கொண்டுதருவதில்ல.
படைவீரர்களிடமிருக்கும் ஆயுதத்தை பயன்படுத்த தேவையற்ற அமைதியான சமூகம் உருவாக
வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version