Home இலங்கை அரசியல் சி.வி.கே அனுப்பிய கடிதம் : சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்ட தகவல்

சி.வி.கே அனுப்பிய கடிதம் : சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்ட தகவல்

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தால் (
C. V. K. Sivagnanam) அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் எந்தவொரு கடிதமும் கிடைக்கவில்லை என்று ஈழமக்கள்
புரட்சிகர விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்கிய நான்கு கட்சிகளும் தமிழினத்தின் நலன்
கருதி மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக்
கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், ஏனைய கட்சிகளின் தலைவர்களுக்குக்
கோரிக்கை விடுத்திருந்தார்.

கடிதம் கிடைக்கப்பெற்றவுடன்..

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழீழ மக்கள்
விடுதலை கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிகர
விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை
அனுப்பி அவர் இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார்.

இந்தநிலையில், அவ்வாறான கடிதம் தமக்குக் கிடைக்கவில்லை எனவும், கடிதம்
கிடைக்கப்பெற்றவுடன் அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் ஈழமக்கள்
புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களிடம்
தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version