Home இலங்கை அரசியல் கடையடைப்பு குறித்து தமிழரசு கட்சி வெளியிட்ட கடிதம்

கடையடைப்பு குறித்து தமிழரசு கட்சி வெளியிட்ட கடிதம்

0

எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறவுள்ள கடையடைப்புக்கு ஆதரவாக ஊடக சந்திப்புகளை நடாத்தியும், வர்த்தக சங்கங்களை
சந்தித்தும் ஆதரவை திரட்டுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சி வெளியிட்டுள்ள கடிதத்தில் கட்சியின் பதில் தலைவரான சி.வி.கே.சிவஞானம், பதில்
செயலாளரான எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
 

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

இலங்கை தமிழரசுக் கட்சியின்
சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சகல உள்ளூராட்சி மன்ற
உறுப்பினர்களுக்கும்

அன்புடையீர்,

எதிர்வரும் திங்கட்கிழமை 18ஆம் திகதி கடையடைப்பு தொடர்பானது

எமது கட்சியினால் மேற்சொன்ன நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது நீங்கள்
அறிந்ததே.

முழுமையான பங்களிப்பு

இதை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்கு உங்கள் அனைவரினதும் முழுமையான
ஒத்துழைப்பு அத்தியாவசியமானது.

நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளூராட்சி
தவிசாளர்களும் ஊடக சந்திப்புக்களை நடாத்தி சகலரது ஆதரவை கோருவது அவசியமாகும்.

அத்தோடு அனைத்து வணிகர் சங்கங்களையும் சந்தித்து ஆதரவை கோருவதோடு
உறுப்பினர்கள் நேரடியாக சந்தைக்கும் கடைக்கும் சென்று இதை செய்வது நல்லது.

கட்சியின் நிர்மானத்தை வலுவாக நிறைவேற்ற உங்கள் முழுமையான பங்களிப்பை
எதிர்பார்க்கிறோம் – என குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version