உள்ளூரட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நுவரெலியா (Nuwara Eliya) மாவட்டத்தில் இன்று (06) காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.
அந்த மாவட்த்தின் 12 சபைகளுக்குமான 300 உறுப்பினர்களை தெரிவு
செய்வதற்கான தேர்தலில் 6,10,117 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இதில் 18,342 பேர் தபால் மூல வாக்காளர்களாக இருப்பதுடன் ஏனையவர்கள் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 540 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களித்து வருகின்றனர்.
ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள்
அத்துடன் நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைக்காக 6,352 அதிகாரிகள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதில் போக்குவரத்துக்காக அரச மற்றும் தனியார் வாகனங்கள் அடங்கலாக 672 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றது.
மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும் நீதியாகவும் சுதந்திரமான முறையிலும் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.
மேலும் மலையகத்தை பொறுத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும்
வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை அளிப்பதை
காணக்கூடியதாக உள்ளதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
