யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் (K.Ilankumaran) காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட
சுண்ணக்கல்லை ஏற்றிச்சென்ற பாரவூர்தி காவல்துறையினரால் சோதனைக்குட்படுத்தப்பட்டது.
கடந்த வாரம் யாழ்ப்பாணம் (Jaffna) – சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் வைத்து குறித்த பாரவூர்தி வழிமறிக்கப்பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் சாவகச்சேரி காவல் நிலையத்தில் வைத்து நேற்று (09) சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
மேற்படி சுண்ணக்கல்லை ஏற்றி வந்த வாகனத்தில் ஏதேனும் சந்தேகத்திற்கு இடமான
பொருட்களை மறைத்து எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டது.
சோதனைக்கு உட்படுத்தினர்
இந்த நிலையில் சாவகச்சேரி காவல்துறையினர் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் சுண்ணக்கற்களை
வாகனத்தில் இருந்து அகற்றி சோதனைக்கு உட்படுத்தியிருந்தனர்.
மேற்படி சோதனை நடவடிக்கையின் போது எந்தவொரு சந்தேகத்திற்கிடமான பொருட்களும்
இல்லாத நிலையில் காவல்துறையினர் கனரக வாகனம் மற்றும் சுண்ணக்கற்களை சாவகச்சேரி
நீதிமன்றில் பாரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.