Home இலங்கை சமூகம் மாவீரர் தினத்தை முன்னிட்டு மதுபான சாலைகளுக்கும் பூட்டு!

மாவீரர் தினத்தை முன்னிட்டு மதுபான சாலைகளுக்கும் பூட்டு!

0

மாவீரர் தினத்தை புனிதமான ஒரு நாளாக கொண்டாட பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தீர்மானம்
நிறைவேற்றியுள்ளது.

அதன்படி, அன்றைய தினம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மதுபானசாலைகளை மூடுவதற்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய (11.11.2025) சபை அமர்வின் பின் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம் 

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் ,“ 2026 ஆம் ஆண்டிற்குரிய வரவு செலவுத் திட்டம் எங்களுடைய 13 உறுப்பினர்கள் ஆதரவுடனும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

உண்மையில் எமது பிரதேச சபை ஆரம்பிக்கப்பட்டு முதல்முறையாக எமது சபை ஏகமனதாக
வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

இது ஒரு மாற்றம்.

நாட்டிலே ஏற்பட்ட மாற்றம் எமது சபையிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே இதன்
அடிப்படையில் எமது பிரதேச சபையில் அனைத்து வேலைத்திட்டங்களும் விரைவாக
மேற்கொள்ளப்படும்.

இன்றைய தினம் எமது சபையிலே மிக முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக எதிர்வரும் மாவீரர் தினத்தன்று அதாவது 27 ஆம் திகதி பச்சிலைப்பள்ளி பிரதேசசபை எல்லைக்குள் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்.” என தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version