கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக உடுவிலில் கைது செய்யப்பட்டவரின் உறவினர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த
மாவாவுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையினரால் குறித்த கைது நடவடிக்கை
இன்று முன்னெடுக்கப்பட்டது.
ஆயிரம் போதை மாத்திரைகள்
ஆயிரம் போதை மாத்திரைகளும் இரண்டு கிலோ 420 மில்லிகிராம் கஞ்சா கலந்த மாவாவும்
இதன்போது கைப்பற்றப்பட்டது.
சந்தேக நபரை மானிப்பாய் காவல்துறை ஊடாக மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில்
முற்படுத்த யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் நடவடிக்கை
எடுத்துள்ளனர்.
