Home இலங்கை அரசியல் மதுபானசாலை அனுமதி பெற்றவர்களின் பட்டியலை உடன் வெளியிடுங்கள் – முன்னாள் எம்பி கோரிக்கை

மதுபானசாலை அனுமதி பெற்றவர்களின் பட்டியலை உடன் வெளியிடுங்கள் – முன்னாள் எம்பி கோரிக்கை

0

மதுபானசாலை அனுமதி பெற்றவர்களின் விபரங்களை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் வெளியிட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் (E.Saravanapavan) கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் மதுபானசாலைக்கான அனுமதி பெற்றவர்கள் எவரும் எமது அணியில் இல்லை என ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் (jaffna) இன்று (14.10.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர் ஈ.சரவணபவனின் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் 

ஈ.சரவணபவன் மேலும் தெரிவிக்கையில், மக்கள் பக்கம் இருப்பதாக கூறும் அநுர குமார திஸாநாயக்க
இன்னமும் மதுபானசாலை அனுமதிப்பத்திரத்தை பெற்றவர்களின் விபரங்களை வெளியிடாமல்
வைத்துள்ளார்.

தேர்தலுக்கு பின்னர் தான் பார் பெமிட் பட்டியல் வெளிவருமோ தெரியவில்லை.
மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் உண்டு என்பது புலனாகிறது. சிலரிடம்
இருக்கிறது. சிலர் இல்லை என்று சொல்லிக்கொள்கின்றார்கள்.

சிலர் வேறு
பெயர்களில் மாற்றி வைத்திருக்கின்றார்கள். எத்தனையோ விடயங்கள் நடந்தேறிவிட்டன.
பணப்பரிமாற்றங்களும் நடந்து முடிந்துவிட்டது.

தேர்தலுக்கு பின்னர் அநுர குமார திஸாநாயக்க பெயர் விபரங்களை வெளியிடுவதால்
எந்த பிரியோசனமும் இல்லை.

நீங்கள் தெற்கில் மட்டுமல்ல வடக்கு கிழக்கு என எங்கும் ஊழலற்ற ஆட்சியை
நிறுவுவதாக இருந்தால் உண்மையை வெளியிடுங்கள் என ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்திகள் – கஜிந்தன்

Source: https://ibctamil.com/article/list-of-mps-liquor-bar-license-issues-1728896688

NO COMMENTS

Exit mobile version