பிரதேச சபைகள் உட்பட உள்ளூராட்சி மன்றத் தலைவர்களின் பாதுகாப்பு தொடர்பாக
விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸ்மா அதிபர் கவனம்
செலுத்தியுள்ளார்.
இதன் முதற்கட்டமாக, அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ள உள்ளூராட்சி மன்றத்
தலைவர்களின் பட்டியலை உளவுத்துறையினரிடமிருந்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரதேச சபையின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில்
அத்துடன், பாதாள உலகக் குழுக்களிடமிருந்தோ அல்லது வேறு ஏதேனும்
குழுக்களிடமிருந்தோ மரண அச்சுறுத்தல் அல்லது வேறு ஏதேனும் அச்சுறுத்தல்கள்
இருந்தால் உடனடியாக அறிவிக்குமாறு உள்ளூராட்சி மன்றத் தலைவர்களுக்கு பொலிஸார்
அறிவித்துள்ளனர்.
அண்மையில் வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர தமது பிரதேச சபையின்
உத்தியோகபூர்வ அலுவலகத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
