Home இலங்கை சமூகம் டித்வா புயல் காரணமாக தோட்டச் செய்கையாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

டித்வா புயல் காரணமாக தோட்டச் செய்கையாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

0

நாட்டில் ஏற்பட்டுள்ள டித்வா புயல் காரணமாக பலரும் பாதிக்கப்பட்ட நிலையில்
விவசாயிகளும் தமது வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் அதிகமாக
பாதிக்கப்பட்டுள்ளார்.

அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தின் புளியம்பொக்கணை கமநல சேவை பிரிவுக்கு உட்பட்ட பிரமந்தனாறு மயில்வானபுரம் கொழுந்து புலவு ஆகிய
பகுதிகளில் தோட்டச் செய்கையில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தம்மால்
மேற்கொள்ளப்பட்ட கத்தரி மிளகாய் கறிமிளகாய் என பல்வேறு மரக்கறி வகைகளும்
வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வாழ்வாதாரம் பாதிப்பு

அத்தோடு, மரக்கறிகள் தற்பொழுது அழுகிய நிலையில் காணப்படுவதாகவும் எந்த பயனும் பெற முடியாத
நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த அழிவு காரணமாக பல இலட்சம் ரூபாய் நஷ்டம்
ஏற்பட்டுள்ளதாகவும் இதனை தற்போதைய அரசாங்கம் உரிய முறையில் பதிவினை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளாகிய எமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி நஷ்ட ஈட்டினைபெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என
பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version