Home இலங்கை குற்றம் ஹோட்டலுக்குள் நடந்த களியாட்ட விருந்தில் சிக்கிய ஆளும் கட்சியின் முக்கியஸ்தரின் மகள்

ஹோட்டலுக்குள் நடந்த களியாட்ட விருந்தில் சிக்கிய ஆளும் கட்சியின் முக்கியஸ்தரின் மகள்

0

கண்டியில் ஹோட்டல் ஒன்றுக்குள் நடந்த பேஸ்புக் களியாட்ட விருந்தின் போது, ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரமுகரின் மகள் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி பிரதி மேயர் ருவன் குமாரவின் 26 வயதான மகள் உட்பட நான்கு பெண்களும் 22 ஆண்களும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு போதைப்பொருள் விருந்து நடப்பதாக கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் சுற்றிவளைத்து அவர்களை கைது செய்தனர்.

ஆளும் கட்சியை சேர்ந்தவரின் மகள்

கண்டி, முல்லேரியா, ஹட்டன், பிலகல, அத்துருகிரிய, கொடகெதர, ஹோமாகம, தொம்பே, எம்பிலிப்பிட்டிய, திருகோணமலை மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளை சேர்ந்த 18 முதல் 31 வயதிற்கு இடைப்பட்ட 22 ஆண்களும் கண்டி, நீர்கொழும்பு, பூண்டுலோயா பகுதிகளை சேர்ந்த 21 முதல் 26 வயதிற்குட்பட்ட நான்கு பெண்கள் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 18 முதல் 31 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

அவர்களிடமிருந்து 4,134 மில்லிகிராம் ஐஸ், 1,875 மில்லிகிராம் ஹேஷ், 2,769 மில்லிகிராம் குஷ், 390 மில்லிகிராம் கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

நாட்டில் முழுமையாக போதைப்பொருளை அழிப்பதற்கு சமகால அரசாங்கம் தீவிரமாக முயற்சித்து வரும் நிலையில், அந்தக் கட்சியை பிரதிநித்துவம் செய்யும் ஒருவரின் மகள் போதைப்பொருளுடன் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version