Home முக்கியச் செய்திகள் வெள்ளத்தில் சிக்கித் தவித்த கால்நடைகள்: தமிழர் பகுதியில் நெகிழ்சிச் செயல்!

வெள்ளத்தில் சிக்கித் தவித்த கால்நடைகள்: தமிழர் பகுதியில் நெகிழ்சிச் செயல்!

0

Courtesy: Kabil

வவுனியா புளியங்குளம் பகுதியில் வெள்ளம் காரணமாக நீரில் சிக்கியிருந்த பல கால்நடைகளை புளியங்குளம் புரட்சி விளையாட்டு கழக இளைஞர்கள் காப்பாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பல கால்நடைகள் மீட்கப்பட முடியாத நிலையில் மக்கள் குறித்த பிரதேசங்களில் இருந்து வெளியேறியிருந்தனர்.

பலத்த மழை

இந்நிலையில், அவற்றை மீட்கும் பணியில் புளியங்குளம் புரட்சி விளையாட்டுக்கழக இளைஞர்கள் பலத்த மழையையும் பொருட்படுத்தாது களத்தில் இறங்கி ஆடு உட்பட்ட கால்நடைகளை மீட்டு பாதுகாப்பாக கரை சேர்த்துள்ளனர்.

இந்த நெகிழ்சியான சம்பவம் மக்களிடையே மற்றும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version