Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டமூலம் நிறைவேற்றம்

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டமூலம் நிறைவேற்றம்

0

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் சட்டமூலம், நாடாளுமன்றத்தில் மேலதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்துக்கு ஆதரவாக 187 வாக்குகள் அளிக்கப்பட்டு ஏகமனதாக திருத்தங்களின்றி நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்கவில்லை.


சட்டமூலம் நிறைவேற்றம்

இதன்மூலம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு புதிய வேட்புமனுக்களை கோருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சட்டமூலம் அங்கீகரிக்கப்பட்டவுடன் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சட்டமூலத்திற்கு ஒப்புதல் அளித்தார்.

You May Like This..

NO COMMENTS

Exit mobile version