Home இலங்கை சமூகம் உள்ளூராட்சி தேர்தல் பணிகளில் ஆயிரக்கணக்கான அரச பணியாளர்கள்!

உள்ளூராட்சி தேர்தல் பணிகளில் ஆயிரக்கணக்கான அரச பணியாளர்கள்!

0

நாடு முழுவதும் நாளை நடைபெறவுள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள்
தொடர்பான பல்வேறு பணிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அலுவலக உதவியாளர்கள், எழுத்தர்கள் முதல் மேலதிக அமைச்சகச் செயலாளர்கள் வரை
மொத்தம் 250,000 அரசு பணியாளர்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

தேர்தல் 

இலங்கை தேர்தல் ஆணையகத்தின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவின் தகவல்படி,
150,000 க்கும் மேற்பட்ட பெண் அரச அதிகாரிகளும், தேர்தல் கடமைகளில்
பங்கேற்பார்கள்.

பொது சேவையின் பல்வேறு தரங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அதிகாரிகள்,
நாடு முழுவதும் உள்ள 4,877 இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.

இதற்கிடையில், சுதந்திரமான மற்றும் நியாயமான உள்ளூராட்சி மன்றத் தேர்தலைக்
கண்காணிப்பதில் ஆணையகத்திற்கு உதவ ஏழு உள்ளூராட்சி தேர்தல் கண்காணிப்பு
அமைப்புகள் முன்வந்துள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

கண்காணிப்பு 

இதில், பழமையானதும் அங்கீகரிக்கப்பட்டதுமான இரண்டு கண்காணிப்பு அமைப்புகளான
பெப்ரல் என்ற சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான மக்கள் நடவடிக்கை
மற்றும் தேர்தல் சி.எம்.இ.வி என்ற தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் ஆகியவை
வாக்குச் சாவடிகளுக்குள் நுழையும் அதிகாரங்களை கொண்டுள்ளன.

மீதமுள்ளவை நடமாடும் பார்வையாளர் அமைப்புக்களாக செயல்படலாம் என்று ஆணையாளர்
குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை இரவுக்குள் பெரும்பாலான முடிவுகளை அறிவித்து,
புதன்கிழமைக்குள் முழு முடிவுகளை அறிவிக்க ஆணையகம் எதிர்பார்க்கிறது என்று
ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version