Home இலங்கை அரசியல் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த தவணைக் கொடுப்பனவில் சிக்கல்: சம்பிக ரணவக

சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த தவணைக் கொடுப்பனவில் சிக்கல்: சம்பிக ரணவக

0

இலங்கைக்கு விரிவான கடன்திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியம் வழங்க இருந்த அடுத்த தவணைக் கொடுப்பனவில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக சம்பிக ரணவக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் குடியரசு கட்சியின் சார்பில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அதன் தலைவர் பாட்டலி சம்பிக ரணவக இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மாற்றமின்றி தொடரும் இணக்கப்பாடு

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் ரணில் விக்ரமசிங்க மேற்கொண்ட அதே இணக்கப்பாட்டை எந்த மாற்றமும் இன்றி அப்படியே முன்கொண்டு செல்கின்றது.

ஆனால் இவர்களால் மின்கட்டண அதிகரிப்பு, ஶ்ரீலங்கன் விமான சேவை தனியார்மயப்படுத்தல் போன்றவற்றில் சர்வதேச நாணய நிதியம் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளது.

அரசாங்கத்தின் நிலைப்பாடு

அத்துடன் எரிபொருள் கூட்டுத்தாபனம், இலங்கை மின்சார சபை போன்ற அரச நிறுவனங்கள் தொடர்பிலும் அரசாங்கத்தின் நிலைப்பாடு சர்வதேச நாணய நிதியத்தின் நிலைப்பாட்டுக்கு மாற்றமாகவே உள்ளது.

இவ்வாறான நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த தவணைக் கொடுப்பனவு தாமதமாகும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக சர்வதேச மட்டத்தில் நம் நாட்டின் நம்பகத்தன்மை குறைந்து பொருளாதார சிக்கல்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version