Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி தேர்தல் இலக்கு: களமிறங்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி

உள்ளூராட்சி தேர்தல் இலக்கு: களமிறங்கும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி

0

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை மற்றும் மாகாணசபை தேர்தலிலே போட்டியிட
புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி (Tamil Makkal Viduthalai Pulikal) தீர்மாணித்துள்ளது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் செய்தியாளர்
சந்திப்பு இன்று 21.11.2024 திருகோணமலை (Trincomalee) நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் செயலாளர் நாயகம் கந்தசாமி இன்பராசா (Kandasamy Inparasa), “பொதுச்சபையானது இன்றைய தினம் கூட்டப்பட்டு அதிலே புதிய நிர்வாகசபை தெரிவு
இடம்பெற்றது.

உள்ளூராட்சி சபை 

தொடர்ச்சியாக,
கடந்த காலங்களில் இடம்பெற்ற  நாடாளுமன்ற தேர்தலில் வட கிழக்கு ரீதியாக
போட்டியிட்டிருந்த போதிலும் சுயேட்சைக் குழுவாக போட்டியிட்டதன் காரணமாக
தேர்தலிலே பின்னடைவினை சந்தித்திருப்பதாகவும், வருங்காலத்தில்
நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபை மற்றும் மாகாணசபை தேர்தலிலே போட்டியிட்டு
தமிழ் மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் களமிறங்க தீர்மானித்துள்ளதாகவும்
குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் நாடாளுமன்ற ஆசனம் ஒன்றினை பெற்றுக்கொள்ளும் வகையிலான
வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் தாம் தயாராக இருப்பதாகவும் இதன்போது
தெரிவித்திருந்தார்.

அத்துடன்
நிர்வாகத் தெரிவிலே வட கிழக்கு ரீதியில் காணப்பட்ட வெற்றிடங்கள்
நிரப்பப்பட்டதுடன் கட்சியின் தலைவராக ரோய் அருமைநாயகம் ரமேஷ்காந், செயலாளர்
நாயகமாக கந்தசாமி இன்பராசா மற்றும் ஊடக பேச்சாளராக ராஜீ குகதீபன் ஆகியோர்
தெரிவு செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version