Home இலங்கை அரசியல் மன்னாரில் நான்கு சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

மன்னாரில் நான்கு சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ள ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு

0

மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட நான்கு
சபைகளுக்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்டுப்பணத்தை
செலுத்தியுள்ளது.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்றைய தினம் (10) மதியம்
மன்னார் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

நான்கு சபைகள் 

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்
செல்வம் அடைக்கலநாதனின் செயலாளரும், ரெலோ கட்சியின் மன்னார் மாவட்ட
அமைப்பாளருமான டானியல் வசந்தன் தலைமையில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, நானாட்டான் பிரதேச சபை, முசலி பிரதேச
சபை, மாந்தை மேற்கு பிரதேச சபை ஆகிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை
செலுத்தப்பட்டுள்ளன. 

மேலும், மன்னார் பிரதேச சபை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று
வருகின்றமையினால் மன்னார் பிரதேச சபைக்கான தேர்தல் குறித்து உத்தியோக
பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையிலே ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு மன்னார் மாவட்டத்தில் நான்கு
உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளது. 

NO COMMENTS

Exit mobile version