Home இலங்கை அரசியல் ஆட்சியமைக்க முஸ்லிம் காங்கிரஸ் உடன் கைகோர்க்கும் தமிழரசுக்கட்சி

ஆட்சியமைக்க முஸ்லிம் காங்கிரஸ் உடன் கைகோர்க்கும் தமிழரசுக்கட்சி

0

திருகோணமலை (Trincomalee) மாவட்டத்தில் 5 உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைக்க இலங்கை தமிழ் அரசு கட்சிக்கும் ஶ்ரீலங்கா முஸ்லீம் காங்ரஸிற்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இலங்கை தமிழ் அரசு கட்சியின் (ITAK) திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்
திருகோணமலை மாவட்டக்கிளைத் தலைவருமான சண்முகம் குகதாசன் மற்றும் ஶ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ் தௌபீக்
ஆகியோருக்கும் இடையில் இன்று (27)  ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

புரிந்துணர்வு அடிப்படையில் ஒப்பந்தம்

அந்த வகையில் திருகோணமலை மாநகரசபை, பட்டணமும் சூழலிம் பிரதேச
சபை, மூதூர், குச்சவெளி தம்பலகாமம் ஆகிய உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது
தொடர்பில் இரு கட்சிகளுக்கிடையிலும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

குறித்த சபைகளின் தவிசாளர் பதவிகளை இரு கட்சிகளும் புரிந்துணர்வு அடிப்படையில் வகிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

https://www.youtube.com/embed/ei1iGD3ePJ4

NO COMMENTS

Exit mobile version