Home இலங்கை அரசியல் மீண்டும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்! இறுதி முடிவை எடுத்தது அரசாங்கம்

மீண்டும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்! இறுதி முடிவை எடுத்தது அரசாங்கம்

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை மீளக் கோருவதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்களது கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

எதிர்வரும், 2025ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத்(Vijitha Herath) அண்மையில் அறிவித்திருந்தார்.

எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

எனினும்,  ஏற்கனவே கோரப்பட்ட வேட்பு மனுக்களைக் கொண்டு தேர்தலை நடத்துவதா, அல்லது புதிய வேட்பு மனுக்களைக் கோருவதா என்பது தொடர்பில் அனைத்து கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் தீர்மானிக்கப்படும் என்று அவர் அறிவித்திருந்தார்.

இந்தநிலையில், இன்றையதினம் இடம்பெற்ற கூட்டத்தின் போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக புதிதாக வேட்பு மனுக்களை கோருவதென்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் முடிவில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் இணைந்து இந்த தீர்மானத்திற்கு உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், கடந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கோரப்பட்ட போது 17வயதாக இருந்த பலர் தற்போது வாக்களிக்கும், மற்றும் தேர்தலில் போட்டியிடும் தகைமையைக் கொண்டுள்ளதால், அவர்களுக்கான சந்தர்ப்பத்தையும் வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version