Home இலங்கை அரசியல் யாழில் வெறிச்சோடியுள்ள வாக்களிப்பு நிலையங்கள்!

யாழில் வெறிச்சோடியுள்ள வாக்களிப்பு நிலையங்கள்!

0

உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் இன்றைய தினம்
(06.05.2025) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி சுமுகமாக நடைபெற்று வருகின்றது.

 அத்துடன் பல வாக்களிப்பு நிலையங்கள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றதாக சுட்டிக்காட்ப்படுகின்றது.

இதன்படி யாழ்ப்பாண மாவட்டத்தில் பி. ப 12.30 மணி நிலவரப்படி 34.48℅ வீதமான
வாக்கு பதிவு இடம்பெற்றிருக்கின்றது என யாழ்ப்பாண மாவட்டச் செயலக தகவல்கள்
தெரிவிக்கின்றன.

மந்த கதியில் வாக்களிப்பு

அத்துடன் வாக்களிப்பு மந்த கதியில் இடம்பெறுவதுடன் குறைந்தளவு வாக்காளர்களே
வாக்களிப்பதை அவதானிக்க முடிகின்றது.

இந்த நிலையில் யாழில் பல வாக்களிப்பு நிலையங்கள்
வெறிச்சோடி காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

பி.ப 3.00 மணிக்கு பின்னர் வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை ஓரளவுக்கு
அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணம் வடமராட்சி, மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதியில் international
foundation for election system அமைப்பு தேர்தல் கண்காணிப்பில்
ஈடுபட்டனர்.

அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில்
தற்போது வாக்களிப்பு சுமுகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் சில வாக்களிப்பு நிலையங்களுக்கு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான
திரு.மருதலிங்கம் பிரதீபன் நேரில் சென்று அவதானித்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/qXWI5EWp_l4

NO COMMENTS

Exit mobile version