Home இலங்கை அரசியல் கிளிநொச்சி – பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு

கிளிநொச்சி – பூநகரி பிரதேச சபைக்கான தேர்தல் குறித்து வெளியான அறிவிப்பு

0

தேர்தல் ஆணைக் குழுவின் சுற்று நிருபத்திற்கு அமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் இரண்டு சபைகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று (4) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பச்சிலைப்பள்ளி, பூநகரி ஆகிய மூன்று
பிரதேச சபைகளில், பூநகரி பிரதேச சபை தவிர்ந்த ஏனைய சபைகளுக்கான தேர்தல்கள் நடைபெறவுள்ளன.

வழக்கு தாக்கல்

ஏற்கனவே சுயேட்சைக் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனு
நிராகரிக்கப்பட்டமை தொடர்பில் நீதிமன்ற வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

இதன் காரணமாக கிளிநொச்சி-பூநகரி பிரதேச சபைக்கான தேர்தலுக்காக ஏற்கனவே சுயேட்சைக் குழு
ஒன்று செய்த வேட்பு மனு தாக்கல் நிராகரிக்கப்பட்டமை தொடர்பாக குறித்த
சுயேட்சை குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த
வழக்கானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதால் இந்த சபைக்கான தேர்தல் வேட்பு மனு நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version