Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பம்

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று ஆரம்பம்

0

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (17) ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று (17) முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு (Election Commission) அறிவித்துள்ளது.

336 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று ஆரம்பமாகவுள்ளதுடன், வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின்னர் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சாதாரண தரப் பரீட்சை

அத்துடன் இன்று தொடங்கும் சாதாரண தரப் பரீட்சைகளுக்கு (G.C.E O/L Exam) இடையூறு ஏற்படாத வகையில் வேட்புமனுக்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம், வேட்பாளர்களிடம் கோரியுள்ளார்.

இதேவேளை மன்னார் (Mannar), பூநகரி (Pooneryn) மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைகளின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் காலம் குறித்து அண்மையில் அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது.

 அதன்படி, மார்ச் 24 ஆம் திகதி முதல் மார்ச் 27 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை குறித்த பிரதேச சபைகளின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version