Home இலங்கை அரசியல் வேட்புமனுக்கள் நிராகரிப்பு தொடர்பான ரிட் மனுக்கள் குறித்து நீதிமன்றம் எடுத்த தீர்மானம்

வேட்புமனுக்கள் நிராகரிப்பு தொடர்பான ரிட் மனுக்கள் குறித்து நீதிமன்றம் எடுத்த தீர்மானம்

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இருபது ரிட் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (21) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

ரிட் மனுக்கள் தாக்கல்

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் பல்வேறு குறைபாடுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்கள் சார்பில் நீதிமன்றில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் (6) ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version