Home இலங்கை அரசியல் கொலை சம்பவங்களில் பிரபல்யமாக பேசப்பட்ட முன்னாள் எம்.பி மீண்டும் அரசியல் களத்தில்

கொலை சம்பவங்களில் பிரபல்யமாக பேசப்பட்ட முன்னாள் எம்.பி மீண்டும் அரசியல் களத்தில்

0

அண்மைய காலங்களில் இலங்கை அரசியலில் பிரபல்யமாகப் பேசப்பட்டு வந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான லொகான் ரத்வத்தை மீண்டும் அரசியலுக்கு பிரவேசிக்கவிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (18) இடம்பெற்ற ஊடகசந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மீண்டும் அரசியலில்

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இவர் அரசியலில் ஒதுங்கி இருந்தார்.

லொகான் ரத்வத்தை கடந்த தேர்தலில் அமைதியடைந்திருந்த நிலையில் அவர் மீண்டும் அரசியலில் பிரவேசித்துள்ளார்.

இதன்படி, தற்போது நடை பெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

உடதலவின்ன 10 கொலைகள் முதல் அனுராதபுரம் சிறைச்சாலையில் திடீர் பிரவேசம், அண்மையில் வாகன மோசடி உட்பட பல சம்பவங்களில் இவர் பிரபல்யமாகப் பேசப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.   

NO COMMENTS

Exit mobile version