Home இலங்கை அரசியல் மொட்டுக் கட்சிக்கு பெரும் இழப்பு! லொஹான் ரத்வத்தை தொடர்பில் அலி சப்ரியின் கருத்து

மொட்டுக் கட்சிக்கு பெரும் இழப்பு! லொஹான் ரத்வத்தை தொடர்பில் அலி சப்ரியின் கருத்து

0

சிறைக்கைதிகளுக்கு ஹொரண பிரதேசத்தில் 200 ஏக்கரில் பாரிய சிறைச்சாலைச் ஒன்றை அமைப்பதற்கான திட்டத்தை சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சராக இருந்த காலஞ்சென்ற லொஹான் ரத்வத்தை நடைமுறைப்படுத்தியதாக முன்னாள் நிதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று திடீரென்று உயிரிழந்த முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தையை பார்க்க சென்ற சந்தர்ப்பத்திலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கட்சிக்கு பெரும் இழப்பு

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,”லொஹான் ரத்வத்தை,தனக்கு கொடுத்த பதிவிகளை திறம்பட செய்து காட்டியவர். 

அத்துடன் கண்டி மக்களுக்கும் பெரும் சேவை செய்துள்ளார். குறிப்பாக அவரின் குடும்ப சட்டத்தரணி என்ற வகையில் எனக்கு அவருடனான நெருக்கம் ஏற்பட்டதோடு அரசியல் ஈடுபாட்டின் போதும் அவருடன் நான் நெருக்கமாக பழகினேன்.

அவரின் இழப்பு அவர் சார்ந்த பொதுஜன பெரமுன கட்சிக்கு பெரும் இழப்பாகும்.”என கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version