Home சினிமா தலைவருடன் படம் பண்ணு.. லோகேஷிடம் முதல் நபராக கூறிய விஜய்

தலைவருடன் படம் பண்ணு.. லோகேஷிடம் முதல் நபராக கூறிய விஜய்

0

கூலி 

லோகேஷ் கனகராஜ் இன்று தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருக்கிறார். இவர் இயக்கத்தில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து வருகிறார்.

ரெட்ரோ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.. இதுவரை எவ்வளவு செய்துள்ளது வசூல் தெரியுமா

மேலும் நாகர்ஜுனா, ஷோபின் ஷபீர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்து வருகிறார்கள். இப்படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் கூறிய வார்த்தை

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். இந்த பேட்டியில் கூலி படம் உள்ளிட்ட பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.

இதில், தளபதி விஜய் தன்னிடம் கூறி விஷயத்தையும் கூறினார். அவர் கூறியதாவது, “மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பின் போது, தலைவருக்கு ஒரு படம் பண்ணு என விஜய் அண்ணா என்னிடம் கூறினார். கண்டிப்பா அண்ணா பண்ணனும் என நான் கூறினேன். பின் கூலி படம் நடக்கும்போது, விஜய் அண்ணா தான் முதல் நபராக போன் கால் செய்து வாழ்த்துக்கள் கூறினார்” என லோகேஷ் தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version