Home சினிமா ரோலெக்ஸ் திரைப்படம் எப்போது?.. சூர்யாவுடனான கூட்டணி குறித்து லோகேஷ் கொடுத்த மாஸ் அப்டேட்

ரோலெக்ஸ் திரைப்படம் எப்போது?.. சூர்யாவுடனான கூட்டணி குறித்து லோகேஷ் கொடுத்த மாஸ் அப்டேட்

0

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ், தென்னிந்திய திரையுலகில் வெற்றிப் படங்களின் இயக்குநராக வலம் வருகிறார். மாநகரம் என்ற தரமான படத்தின் மூலம் அறிமுகமானவர் கைதி, மாஸ்டர், விக்ரம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

முதல் படத்திலேயே தனது வெற்றியை பதிவு செய்த லோகேஷ், அடுத்ததாக கைதி என்ற ப்ளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தார். அதை தொடர்ந்து, மாஸ்டர், விக்ரம், லியோ  போன்ற படங்களை கொடுத்துள்ளார்.

இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் கூலி. இப்படத்தின் மூலம் முதல் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் லோகேஷ் கைகோர்த்துள்ளார்.

ஜொலிக்கும் உடை.. அழகில் மயக்கும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட் போட்டோஸ்

எப்போது?

இந்நிலையில், லோகேஷ் சூர்யாவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” நானும் சூர்யாவும் இணைந்து ‘ரோலெக்ஸ்’ படத்தில் இணைய இருக்கிறோம். நாங்கள் இருவரும் தற்போது கமிட்மெண்டில் இருக்கிறோம். அது முடிந்த பின் தான் ரோலக்ஸ் படம் குறித்து யோசிக்க வேண்டும். அதன் பின், படத்தின் ஷூட்டிங் நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version