வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பை வலுப்படுத்தவும் தமிழ் தேசியத்தை
உறுதியாக நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பும் தமிழ் மக்களின் கைகளில் தான்
இருக்கின்றது என கிழக்கு மாகாண வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம்
வேண்டுகோள் விடுத்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை மாவட்ட
வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று
மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்றது.
மூன்று மாவட்டங்களின் தலைவிகளும் இதில்
கருத்து தெரிவித்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின்
மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி,
தமிழ் மக்கள்
”இன்றைய ஊடக சந்திப்பானது உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் மக்கள் யாருக்கு
வாக்களித்து வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் இருப்பை வலுப்படுத்தவும் தமிழ்
தேசியத்தை உறுதியாக நிலைநிறுத்த வேண்டிய பொறுப்பும் தமிழ் மக்களின் கைகளில்
தான் இருக்கின்றது.
ஆகவே எமது ஒற்றுமையை உள்ளூராட்சி தேர்தலின் ஊடாக வெளிப்படுத்துங்கள் சென்ற
காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் இப்போது ஆட்சிக்கு வந்தவர்கள் இதுவரை
காலமும் என்ன செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
நாம் மறக்கவும் மாட்டோம் நமக்கு வாழும் உரிமை வேண்டும் என்று எங்களால் தெரிவு
செய்யப்பட்டு எமது பெறுமதியான வாக்குகளை கொடுத்து அனுப்பப்பட்டவர்களையும்
ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் சிங்கள தேசிய அரசியல் கட்சிகளும் சிங்கள அரசும்
ஏமாற்றி இருக்கின்றார்கள் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
