Home இலங்கை குற்றம் மாந்தை கிழக்கு பகுதியில் சட்டவிரோத தேக்கமரங்களுடன் சிக்கிய லொறி

மாந்தை கிழக்கு பகுதியில் சட்டவிரோத தேக்கமரங்களுடன் சிக்கிய லொறி

0

மாந்தை கிழக்கு பகுதியில் சட்ட விரோதமாக தேக்க மர குற்றிகளை ஏற்றி செல்ல
முற்பட்ட லொறி ஒன்றுமாங்குளம் விசேட அதிரடிப்படையினரால்
கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம்(24.06.2024) இடம்பெற்றுள்ளது.

மாங்குளம் விசேட அதிரடி படையினருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலை அடுத்து
மாங்குளம் வனவள பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து மாந்தை கிழக்கு செல்வபுரம்
பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

இதன்போது, கால்நடைகளின் கழிவுகளினால் மூடப்பட்டு, உரு மறைப்பு செய்யப்பட்டிருந்த நிலையில் லொறியில்
ஏற்றப்பட்டிருந்த 35 லட்சம் பெறுமதியான தேக்குமர குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, லொறியின் சாரதி மற்றும் , உதவியாட்கள் தப்பியோடியிருந்த நிலையில்
விசேட அதிரடி படையினரால் கைப்பற்றப்பட்ட தேக்குமர குற்றிகள், மாங்குளம்
வனவள பாதுகாப்பு பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள மாங்குளம் வனவள பாதுகாப்பு
பிரிவினர், எதிர்வரும் புதன்கிழமை (26) மாங்குளம் நீதவான் நீதிமன்றில்
வழக்குத்தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version