Home இலங்கை அரசியல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீடு இழப்பு

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீடு இழப்பு

0

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு திறைசேரிக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இம்முறை ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு ஐந்து கோடிகள் ஒதுக்கப்பட்டது.

மீண்டும் திறைசேரிக்கு அனுப்பபட்ட நிதி

அதற்கான திட்டத்தினை குறித்த காலத்திற்கு முன்பாக முன்வைக்காமை காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களான இராஜவரோதயம் சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன், சி.வி.விக்னேஸ்வரன், செல்வராஜா கஜேந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர்களது ஒதுக்கீடுகள் கிடைக்கவில்லை என்று தெரிய வருகின்றது.

இதன் காரணமாக தமிழர் பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தக் கூடியதாக இருந்த இருபத்தி ஐந்து கோடி நிதி மீண்டும் திறைசேரிக்கு திரும்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழரசுக்கட்சியில் புதிய தேர்தல் நடந்தால் தலைவர் புதியவர்

சஹ்ரானின் பின்னணியில் இருந்தவருக்கு கோட்டாபய வழங்கிய உயர் பதவி! அம்பலப்படுத்தும் பொன்சேகா

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW

NO COMMENTS

Exit mobile version