இலங்கை (srilanka) வர்த்தகர் ஒருவரால் “Air Ceilao” என்ற பெயரில் மற்றுமொரு புதிய விமான சேவை ஆரம்பிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பான நடவடிக்கைகள் சிவில் விமான சேவை அதிகார சபையுடன் (Civil Aviation Authority) இணைந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த விமான சேவையானது குறைந்த விலையில் ஆடம்பரமான விமானப் பயணத்தில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
ஐரோப்பாவுக்கான விமான சேவை
தமது விமானப் பயணம் அசாதாரணமானதாகவும் அனைவருக்கும் அணுகக்கூடியதாகவும் இருக்கும் என நிறுவனத்தின் தலைவர் ஜனத் கஷான் (Janith Kashan) தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பாவுக்கான விமான சேவையை ஆரம்பிப்பதே இந்த விமான நிறுவனத்தின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு விரிவடைந்து வருவதால், இந்த விமான சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.