Home இலங்கை அரசியல் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவில்லை! கர்தினால்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவில்லை! கர்தினால்

0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் சந்தித்த போதிலும் எந்த ஒரு வேட்பாளருக்கும் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆதரவளிக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்தினலின் சார்பில் அவரது ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி பெர்னாண்டோ அருட்தந்தை இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர் கர்தினலை சந்திப்பதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப எவ்வித தெரிவுகளும் இன்றி அவர்களை சந்தித்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

நிலைப்பாடு

அவ்வாறு வேட்பாளர்களை சந்தித்த மாத்திரத்தில் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாக அர்த்தப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க சபையோ கர்தினலோ எந்த ஒரு அரசியல் தரப்பிற்கும் ஆதரவினை வெளிப்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் புத்திசாதூரியமாக அந்த தீர்மானத்தை எடுக்க வேண்டிய பொறுப்பு பொதுமக்களை சாரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவே கத்தோலிக்க சபையினதும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினதும் நிலைப்பாடு என அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version