புதிய சலுகைக் கடன் திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அனர்த்த நிலைமைகளால் பாதிக்கப்பட்ட நுண், சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக இந்த கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த கடன் திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சலுகைக் காலம்
இந்தக் கடன் திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ஆறு மாத கால சலுகைக் காலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், நுண் தொழில் முயற்சிகளுக்காக வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகை 250,000 ரூபா எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறு மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்காக வழங்கப்படும் அதிகபட்ச கடன் தொகை பத்து இலட்சம் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கடன் திட்டத்தின் கீழ் மூன்று வருட காலப்பகுதிக்கு நிதியளிக்கப்படவுள்ளதுடன், இதற்கான வட்டி வீதம் மூன்று வீதமாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
