வீடொன்றில் தனியாக வசித்து வந்த திருமணமாகாத வயோதிப சட்டத்தரணி ஒருவரை படுக்கையில் வைத்து மர்மமான முறையில் படுகொலை செய்து சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தெஹிவளை – களுபோவில வீதி மற்றும் சில்வா குறுக்கு வீதியில் வசித்து வந்த 64 வயதான செபாலிகா சாந்தனி சதரசிங்க என்பவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சட்டத்தரணி வீட்டில் தனியாக காலத்தை கழித்துள்ளதாகவும், அவரது சகோதரர் கனடாவில் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயன்ற பிரதான பாதாள உலகக்கும்பலின் உறுப்பினர் கைது
பொலிஸார் விசாரணை
சகோதரனை தொடர்ந்தும் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டுள்ள அவர், கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி தொடர்புகொண்டுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கனடாவில் வசிக்கும் சகோதரர் மிரிஹானாவில் வசிக்கும் தனது நண்பரிடம் கூறியதையடுத்து கொஹுவல பொலிஸில் நேற்று 29 ஆம் திகதி மதியம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் மர்மமான முறையில் சட்டத்தரணி படுகொலை செய்யப்பட்டு சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளமையை கண்டுபிடித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஹுவல பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
பயனாளிகளின் கணக்குகளில் 115 பில்லியன் ரூபா: மகிழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்
மே தினத்திற்காக இலங்கை போக்குவரத்து சபையின் 1500 பேருந்துகள்: வெளியான சுற்றறிக்கை
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |