தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழரசு கட்சியின்
வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையினரால் பிரசார பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில் வட்டுக்கோட்டை, சங்கானை, பண்டத்தரிப்பு, காரைநகர் மற்றும் மாதகல்
உட்பட்ட பகுதிகளில் இன்று(16) காலை முதல் பிரசார பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பிரசார கூட்டம்
இதன்பொழுது இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிகிளை தலைவரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் , இலங்கை தமிழரசு கட்சியின்
வட்டுக்கோட்டை தொகுதிகிளை மகளிர் அணி, இளைஞர் அணியினர் கலந்து கொண்டுள்ளனர்.
இதேவேளை, வட்டுக்கோட்டை மூளாய் வேரம் பகுதியில் நாளை(17) செவ்வாய்க்கிழமை மாலை 4
மணியளவில் தொகுதிக்கிளையின் பிரசாரகூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.