Home இலங்கை சமூகம் கட்டுநாயக்காவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சொகுசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது

கட்டுநாயக்காவிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட சொகுசு பேருந்து சேவை நிறுத்தப்பட்டது

0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து கோட்டை தொடருந்து நிலையம் மற்றும் மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட சொகுசு பேருந்து சேவை இன்று (19) முதல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த சொகுசு பேருந்து சேவை கடந்த 15ஆம் திகதி தொடங்கப்பட்ட நிலையில்,அதற்கெதிராக அன்றே போராட்டங்களும் நடைபெற்றன.

ஆரம்பிக்கப்பட்ட அன்றே எதிர்ப்பு

குறிப்பாக கோட்டை தனியார் சொகுசு பேருந்து சங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேருந்து சேவையை புறக்கணிக்க ஆரம்பித்தது.

அதுமட்டுமின்றி, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும் தேர்தல் ஆணையாளர் அலுவலகம் ஆகியவற்றிற்குச் சென்று தங்களது எதிர்ப்பை முன்வைத்திருந்தனர்.

கட்டுநாயக்க விமான நிலைய டாக்சி சாரதிகளும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

அனைத்தையும் கருத்திற் கொண்டு 04 நாட்களுக்கு பின்னர் சொகுசு பேருந்து சேவையை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

9LN9GOBX0

சாதாரண பேருந்து சேவை

நிறுத்தப்பட்டசொகுசு பேருந்துகளுக்கு பதிலாக 10 பேருந்துகள் விமான நிலையத்தில் இருந்து கோட்டை தொடரந்து நிலையம் மற்றும் மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையம் வரை இயக்கப்படும் என விமான நிலைய தனியார் சொகுசு பேருந்து சங்கத்தின் தலைவர் இந்திக்க குணசேகர தெரிவித்தார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23

Source: https://ibctamil.com/article/luxury-bus-service-airport-suspended-1724074855

NO COMMENTS

Exit mobile version