Home இலங்கை சமூகம் தழிழர் பகுதியிலுள்ள மின்சார சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

தழிழர் பகுதியிலுள்ள மின்சார சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

0

மட்டக்களப்பு(Batticaloa) – வாகரை மின்சார சபையின் அசமந்தப் போக்கிற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் எதிர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டமானது மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக இன்று(22.11.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் எதிர்ப்பு

வாகரை பிரதேச செயலக பிரிவில் உள்ள வாகரை, ஊரியன் கட்டு, தட்டு முனை, கதிரவெளி உள்ளிட்ட பல கிராமங்களில் நாளாந்தம் பல மணி நேரம் முன்னறிவித்தல் எதுவுமின்றி, கடந்த இரண்டு மாதங்களாக மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மாணவர்கள், வர்த்தகர்கள், விவசாயிகள் உள்ளிட்ட கிராம மக்களும் தமது நாளாந்த கடமைகள் மற்றும் செயற்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் சிரமப்படுவதாக தெரிவித்தே பொதுமக்கள் இன்று(22) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மின்சார சபையின் இந்த செயற்பாட்டினால் பாடசாலை மாணவர்களின் பரீட்சை கால இரவு நேர கற்றல் நடவடிக்கை முற்றாக பாதிப்படைவதுடன் அவர்களது எதிர்காலம் பாதிப்படைய இது ஏதுவாக அமையுமென மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கையளிக்கப்பட்ட மனு

இதன்போது, “துண்டிக்காதே துண்டிக்காதே முன்னறிவித்தல் இன்றி மின்சாரத்தை துண்டிக்காதே”, “மின்சார சபையே பாடசாலை மாணவர்களின் கல்விக்கு தடையாக இருக்காதே” போன்ற வாசகங்களை பொறித்த பதாதைகளை ஏந்தியவாறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன், தமக்கான தீர்வை பெற்றுத்தருமாறு வாகரை பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபனிடம் மனு ஒன்றை கையளித்ததை தொடர்ந்து போராட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர்.

Source: https://ibctamil.com/article/people-protest-against-electricity-board-batti-1732269513

NO COMMENTS

Exit mobile version