Home முக்கியச் செய்திகள் 400 பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்திற்கு வந்த சொகுசு கப்பல்

400 பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்திற்கு வந்த சொகுசு கப்பல்

0

ரிட்ஸ் கார்ல்டன் சங்கிலியைச் சேர்ந்த சொகுசு பயணக் கப்பல் இன்று (14) 400 பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

இலங்கையின் சுற்றுலாத் துறை சில சவால்களை எதிர்கொண்டிருந்த நேரத்தில் இவ்வளவு பெரிய பயணக் கப்பல் நாட்டிற்கு வருவது சுற்றுலாத் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாகும் என்று சுற்றுலாத் துறையின் துணை அமைச்சர் ருவான் ரணசிங்க, கூறினார்.

இலங்கையில் இரண்டு நாட்கள் தரித்திருக்கும்

சுற்றுலாத் துறையின் துணை அமைச்சர் ருவான் ரணசிங்க, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் மற்றும் பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இந்தக் கப்பல் இரண்டு நாட்கள் இலங்கையில் நங்கூரமிடவுள்ளதுடன் நாளை(15) காலிக்கு வர உள்ளது.

கப்பல் பணியாளர்களுடன் நட்புறவான உரையாடலில் ஈடுபட்ட அமைச்சர், கப்பலின் ஆய்வுப் பணியிலும் பங்கேற்றார்.

அங்கு நினைவுப் பரிசுப் பரிமாற்றமும் நடைபெற்றது.

NO COMMENTS

Exit mobile version