Home இலங்கை அரசியல் யாழில் வாக்களித்த தமிழரசின் பொதுச் செயலாளர் சுமந்திரன்

யாழில் வாக்களித்த தமிழரசின் பொதுச் செயலாளர் சுமந்திரன்

0

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் (M. A. Sumanthiran) உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

யாழ் வடமராட்சி கிழக்கு, குடத்தனை அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையில்
அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை அளித்துள்ளார்.

யாழில் வாக்களிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam) யாழ் மாநகர சபையின் ஐந்தாம் வட்டாரத்திற்குரிய வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

அத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) யா/துன்னாலை காசிநாதர் வித்தியாலயத்தில் தனது வாக்கினைப் பதிவு செய்துள்ளார்.

இதேவேளை ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் (Dharmalingam Siddarthan), ஸ்கந்தவரோதயா கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள
வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். 

அத்துடன் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) யாழ்ப்பாண மாநகர சபை எல்லைக்குட்பட்ட
அத்தியடி கணபதி கலாசார மண்டபத்தில் தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.

மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் யாழ்ப்பாண மாநகர சபை
எல்லைக்குட்பட்ட அத்தியடி கணபதி கலாசார மண்டபத்தில் தனது ஜனநாயக கடமையை
நிறைவேற்றினார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், காங்கேசன்துறை
நடேஸ்வரா கல்லூரியில் அமைக்கப்பெற்றுள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது
வாக்கினை அளித்தார்.

https://www.youtube.com/embed/JkfW4wgO2rMhttps://www.youtube.com/embed/pKZK7cb8Gyw

NO COMMENTS

Exit mobile version