Home இலங்கை அரசியல் சந்திரிக்காவிற்கு கடிதம் எழுதிய மைத்திரி..!

சந்திரிக்காவிற்கு கடிதம் எழுதிய மைத்திரி..!

0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கு (
Chandrika Kumaratunga) முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீண்டும் வெற்றிக் கட்சியாக முன்னெடுக்கும் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு மைத்திரி, சந்திரிக்காவிடம் எழுத்து மூலம் கோரியுள்ளார்.

கட்சியை மீள கட்டியெழுப்புவதற்காக பூரண ஒத்துழைப்பினை வழங்கத் தயார் எனவும், தம்மால் தொடுக்கப்பட்ட வழக்கினை மீளப் பெற்றுக்கொள்ள (வாபஸ்)  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்களிடம் கட்சி ஒப்படைப்பு 

இதேவிதமாக கட்சியின் ஏனைய தரப்பினரால் தொடுக்கப்பட்ட வழக்குகளையும் மீளப் பெற்றுக்கொண்டால் கட்சியை மீளக்கட்டியெழுப்ப முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடிகளில் ஈடுபடாத தூய்மையான இளைஞர்களிடம் கட்சியை ஒப்படைக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வலியுறுத்தியுள்ளார்.

கட்சியில் எந்தவொரு பதவி நிலையும் தமக்கு தேவையில்லை எனவும் எதிர்காலத்தில் கட்சியின் உறுப்பினராக இருந்து கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதாகவும் சிறிசேன தெரிவித்துள்ளார். 

NO COMMENTS

Exit mobile version